கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
திருச்சிற்றம்பலம் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
திருச்சிற்றம்பலம்;
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஏனாதி கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (வயது 49). விவசாயி. இவர் இதே பகுதியில் தண்ணீர் பாய்கின்ற வாய்க்காலில் பொதுமக்களுக்கு தண்ணீர் விடாமல் வாய்க்காலை தூர்த்து அதில் தென்னங்கன்று மற்றும் வாழைமரம் ஆகியவற்றை நட்டு ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பைங்கால் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் (பொறுப்பு ஏனாதி கரம்பை) கேட்டபோது காந்தி, கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் புகார் அளித்தாா். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story