சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ காலில் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை


சிறையில் இருந்து  வெளிநாட்டுக்கு வீடியோ காலில் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
x

அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 2020ஆம் ஆண்டு சிறையிலிருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியது தொடர்பாக சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.+

இதுதொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,

வழக்கில் இருந்து முருகனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story