யானை வாகனத்தில் முருகன் வீதி உலா


யானை வாகனத்தில் முருகன் வீதி உலா
x

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி யானை வாகனத்தில் முருகன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் முருகன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று‌ முன்தினம்‌ இரவு முருகன் யானை வாகனத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நவம்பர் 1-ந் தேதி விடையாற்றி விழாவுடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பூமி நாதன், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story