முருகன் கோவில் கும்பாபிஷேகம்


முருகன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மானங்காத்தான் கிராமத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் மானங்காத்தான் கிராமத்தில் பழமையான முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக மராமத்து பணிகள் நடைபெற்றன. புதிதாக முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களான சந்தனமாரி, காளியம்மன், உச்சிமாகாளி, நாகம்மன் ஆகிய தெய்வங்கள் சிலைகள் பிரதிஷ்ைட செய்யப்பட்டன. தொடர்ந்து கோவிலில் பல்வேறு யாகங்கள், ஹோமங்கள் நடந்து வந்தன. நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவிலில் கும்பாபிஷேகவிழா நடைபெற்றது. சுவாமிகளுக்கும், பல்வேறு பரிவார ெதய்வங்களுக்கும் தீபாராதனைகள், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு, அக்கினி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story