2 டன் முருங்கைக்காய் கொள்முதல்


2 டன் முருங்கைக்காய் கொள்முதல்
x
திருப்பூர்

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்தில் 30 விவசாயிகள் கொண்டு வந்த 2 டன் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டது.

முருங்கைக்காய்

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

நேற்று 30 விவசாயிகள் 2 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.30-க்கும், மரம் முருங்கை ரூ.25-க்கும், கரும்புமுருங்கை ரூ.40-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

முருங்கைப்பூக்கள்

நேற்று கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, திருச்சி, கரூர், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தற்போது முருங்கைக்காய் சீசன் இல்லாததாலும் முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. தற்போது முருங்கைப்பூக்கள் அதிகமாக பூத்துள்ளது.

அடுத்த மாதம் தான் முருங்கைக்காய் வரத்து அதிகரிக்கும் அப்போது முருங்கைக்காய்களின் விலை ேமலும் குறையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story