தஞ்சையில் மார்கழி இசை விழா


தஞ்சையில் மார்கழி இசை விழா
x

கலை பண்பாட்டுத்துறை சார்பில் தஞ்சையில் மார்கழி இசை விழா நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மண்டல கலை பண்பாட்டுத் துறை சார்பில், மார்கழி இசை விழா தஞ்சை வெண்ணாற்றங்கரை அருகில் உள்ள மணிகுன்றா பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் வரவேற்றோர்.விழாவினை தஞ்சை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் திருவையாறு அரசு இசைக்கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி கலந்துகொண்டு பேசினார்.இதில் முதல் நிகழ்ச்சியாக திருக்காட்டுப்பள்ளி நடேசன் தவில், கல்யாணபுரம் கார்த்திகேயன் ஆகியோரின் மங்கல இசை நடைபெற்றது. அனைத்தொடர்ந்து திருபுவனம் ஆத்மநாபன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும், தஞ்சை அனந்தகிருஷ்ணன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், தஞ்சை பொன்னையா நாட்டியப் பள்ளி சசிகலா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து அன்பழகன் குழுவினரின் தேவார திருமுறை இசை நிகழ்ச்சியும், காமாட்சி குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சியும், மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.


Next Story