முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வடுகப்பாளையம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பண்ருட்டி
பண்ருட்டி அடுத்த வடுகப்பாளையம் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட செல்வ விநாயகர் மற்றும் முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
முன்னதாக கங்கை நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, 4 கால யாகபூஜைகள் நடைபெற்றன. பின்னர் நேற்றுகாலை யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று செல்வ விநாயகர் கோவில் கோபுரத்துக்கும், முத்தாலம்மன் கோவில் விமான கோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அண்ணாகிராமம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.கே.வெங்கட்ராமன், முன்னாள் செயலாளர் பலராமன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் மற்றும் வடுகப்பாளையம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.