வேளாண்மை கல்லூரியில் முத்தமிழ் விழா
வேளாண்மை கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, வேளாண்மை இணை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கிளை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாணவர் மன்ற ஆலோசகர் விஜயகுமார் வரவேற்றார். நக்கீரன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் சக்திவேல் தமிழின் வரலாறு மற்றும் சிறப்புகளைக்கூறி சிறப்புரையாற்றினர். முடிவில் மாணவர் மன்ற இணை ஆலோசகர் முனைவர் குமணன் நன்றி கூறினார். தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. தொடர்ந்து பட்டிமன்றமும், நகைச்சுவை நடிகர்கள் போண்டாமணி, முத்துகாளை மற்றும் கிங்காங் ஆகியோர் பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக முதலாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.