முத்தாரம்மன் கோவில் கொடை விழா
குப்பக்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை அருகே சீவலப்பேரியை அடுத்த குப்பக்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. விழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி வளர்த்து கும்மியடித்து வழிபாடு நடத்தினர். முதல்நாள் இரவில் மாக்காப்பு அலங்காரம் நடந்தது. 2-ம் நாள் மதியம் கணபதி ேஹாமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருக்குற்றாலநாதர், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் தாமிரபரணி நதியில் இருந்து புனித நீர் எடுத்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முளைப்பாரி ஊர்வலம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நள்ளிரவு சாமக்கொடை நடந்தது. விழா நிறைவு நாளில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story