முத்தாரம்மன் கோவில் திருவிழா


முத்தாரம்மன் கோவில் திருவிழா
x

தெற்குஆத்தூரில் முத்தாரம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தெற்கு ஆத்தூர் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திரிபுரசுந்தரி என்கிற முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் இரவு திருவிளக்கு பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. 2-வது நாள் ஊர்காவலன் சுவாமி குடியழைப்பும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. 3-ம் நாள் தாமிரபரணி ஆற்றில் இருந்து 108 பால் குடங்கள் மேளதாளம் முழங்க பக்தர்கள் பக்தி பரவசத்துடன் எடுத்து வந்தனர். தொடர்ந்து ஹோம பூஜையூம், அம்பாளுக்கு அபிஷேகம, அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் அம்மனுக்கு கொண்டு வரப்பட்டு பூரணகும்பம் எடுத்து வந்தனர்.இரவு 12 மணியளவில் சாமக்கொடை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் வாணவேடிக்கையும் நடைபெற்றது. 4-ம் நாள் அம்மன் மஞ்சள் நீராடி அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது.


Next Story