அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க விதிவிலக்கு பெற வேண்டும் முத்தரசன் பேட்டி


அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க விதிவிலக்கு பெற வேண்டும் முத்தரசன் பேட்டி
x

அரசு பஸ்களுக்கு சுங்ககட்டணம் வசூலிக்க விதிவிலக்கு பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருச்சி

அரசு பஸ்களுக்கு சுங்ககட்டணம் வசூலிக்க விதிவிலக்கு பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

ஊர்வலம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யு.சி.) 15-வது மாநில மாநாடு திருச்சியில் நேற்று முதல் தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. மாநாட்டையொட்டி பழைய கலெக்டர் அலுவலகம் முதல் எல்.கே.எஸ்.மகால் வரை நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுங்க கட்டணத்துக்கு விதிவிலக்கு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். 1972-ம் ஆண்டு போக்குவரத்துக்கழகம் அரசுடமையாக்கப்பட்டபிறகு தான் கிராமப்புறங்களுக்கு பஸ் வசதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் 19 ஆயிரத்து 290 வழித்தடங்களில் செல்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் அரசு பஸ்களில் ஒரு கோடியே 77 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 1¼ லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். பஸ்களுக்கு பாடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசே செய்தால் இழப்புகள் குறையும்.

அரசியல் நாகரிகம் அறியாதவர்

அரசுக்கு சொந்தமான தேசிய, மாநில சாலைகளில், அரசு பஸ்கள் இயக்கக்கூட சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு அரசு விதிவிலக்கு பெற வேண்டும். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆகவே ஆம்னி பஸ்சை அரசே ஏற்று நடத்த வேண்டும். இவையெல்லாம் செய்தால் அரசு போக்குவரத்துக்கழகத்தை லாபத்துடன் இயக்க முடியும். நிதி அமைச்சர் காரில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நியாயப்படுத்தி பேசுகிறார். கொஞ்சம்கூட அரசியல் நாகரிகம் அறியாதவராக அண்ணாமலை இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story