முத்து மாரியம்மன் கோவில் திருவிழா


முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரித்துவாரமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அடுத்த அரித்துவாரமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 17-ந்ேததி பூச்சொரிதல் விழாவும், 19-ந் தேதி பால்காவடி திருவிழாவும், 24-ந் தேதி தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரித்துவாரமங்கலம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story