முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
நெல்லியாளம் டேன்டீயில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. அதிகாலை மணிக்கு மகா கணபதி ஹோமம், 9 மணிக்கு காப்பு கட்டுதல், 10.30 மணிக்கு கொடியேற்றுதல், தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 24-ந் தேதி காலை 6 மணிக்கு அலங்கார பூஜை, மதியம் 1 மணிக்கு ரேஞ்ச் எண்.1-ல் நீர் தேக்கத்தில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து பறவை காவடி, பால்குடங்கள் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். 25-ந் தேதி காலை 6 மணிக்கு உதய கால பூஜை, மஞ்சள் நீராட்டு, ரேஞ்ச் எண்.2-ல் நதி கரையில் குடிவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story