ஊட்டி அருகே முத்து மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா-திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்


தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே செலவிப் நகா் கிராமத்தில் உள்ள முத்துமாாியம்மன் கோவிலில் 13-ம் ஆண்டு பூ குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே செலவிப் நகா் கிராமத்தில் உள்ள முத்துமாாியம்மன் கோவிலில் 13-ம் ஆண்டு பூ குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குண்டம் திருவிழா

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த காட்டோி அணை அருகே செலவிப்நகா் கிராமத்தில் உள்ள முத்துமாாியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூ குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த முறை 27-ம் ஆண்டு திருவிழா மற்றும் 13-ம் ஆண்டு பூ குண்டம் திருவிழாவையொட்டி கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து அம்மன் கரகம் பாலித்து செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனா பின்னர் அம்மன் அலங்கார பூஜை, ஊா்வலம், மா விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மஞ்சள் நீராட்டு விழா

விழாவின் சிகர நிகழ்ச்சியாக பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு கங்கனம் கட்டும் நிகழ்ச்சி, அக்கனி சட்டி எடுத்து வருவதல் உள்ளிட்டவை நடந்தது. மதியம் 1 மணியளவில் பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதலில் கோவில் பூசாரி, குண்டம் இறங்கினார். இதை தொடர்ந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினாா்கள். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் அப்போது அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, மாலையில் மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா முடிந்தது.


Next Story