முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

திருப்பத்தூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா, ஆதிசக்தி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, மஹா கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை,முதல்கால யாகவேள்வி பூஜை, மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடந்தது.

மேள வாத்தியங்களுடன் தாய்வீட்டு சீர் வரிசை எடுத்து வந்தனர். பின்னர் திருப்பள்ளியெழுச்சி, தம்பதிகள் சங்கல்பம் நடைபெற்றது. விசேஷ சாந்தி, நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் புனித நீர் கலசங்களை மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ராகவேந்திரா டி.வி.சென்டர் டி.வெங்கட்ராமன், பத்திர எழுத்தர் கே.வெங்கடேசன் தலைமையில் கோவில் கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது சில பெண்கள் சாமி வந்து ஆடினார்கள். தொடர்ந்து மூலஸ்தானத்தில் மஹா முத்து மாரியம்மன், மஹா கணபதி, பாலமுருகன் மற்றும் கட்டேரி அம்மன், நாகாலம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிசக்தி நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story