முத்துகுமரசாமி கோவில் தேரோட்டம்


முத்துகுமரசாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டையில் முத்துகுமரசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை கடை வீதியில் பிரசித்தி பெற்ற முத்துகுமரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைமாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவி்ன் சிகர நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

தேரோட்டம்

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துகுமரசாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழிசங்கர், செயல் அலுவலர் மஞ்சு, கவுன்சிலர்கள் அருள்முருகன், செழியன், வேல்முருகன் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. முன்னதாக விநாயகர், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது. விழாவின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story