முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை :செவ்வாய்க்கிழமை நடக்கிறது


முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை :செவ்வாய்க்கிழமை நடக்கிறது
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குரங்கனி முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) திருமால் பூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாளை அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ம காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையும் கணபதிஹோமம், லெட்சுமி ஹோமம், சகஸ்ரநாமம் ஆகியவை நடைபெற்று அம்மன், விநாயகர், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும், தீப ஆராதனை நடைபெறுகிறது. பகல் 1 மணிக்கு குரங்கணி 60 பங்கு நாடார்களால் அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, அஜித் மற்றும் குரங்கணி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்


Next Story