முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு


முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு
x

பண்டுதக்குடி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே பண்டுதக்குடி, அக்கரைப்புதுத்தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்றது வந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல்,, தீபாராதனை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. இதையடுத்த காலை கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story