முத்துமாரியம்மன் கோவில் திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
x

திருமருகல் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இதை தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதி உலா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.இதில் முத்து மாரியம்மன் வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story