முத்துமாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்


முத்துமாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்
x

மாதானம் முத்துமாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் தீமிதி திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இதேபோல, ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெறும் மகா சண்டி யாகம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தவகையில் கோவிலில் மகா சண்டி யாகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக முதல் நாள் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, அஸ்வ பூஜை, நவாவரண பூஜை மற்றும் 13 அத்தியாய ஹோமம், கன்னியா பூஜை, சுவாசினி, வடுக பூஜை, பிரம்மச்சாரி பூஜை, சவுபாக்கிய திரவிய சமர்ப்பணம் ஆகியவை நடைபெற்றன. யாகத்தில் புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடும், அதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பங்கேற்றனர்.



Next Story