முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
தென்னடார் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், நெய், தேன், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது.
Related Tags :
Next Story