முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை காத்தவராயசாமி கழுகு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று காலை 6 மணிக்கு திருத்தேர் கலச பூஜையும், 7 மணிக்கு கோமுகி நதிக்கரையிலிருந்து தேரோடும் வீதி வழியாக அம்மனுக்கு சித்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர் கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி சாலை, நான்கு முனை சந்திப்பு, சேலம் மெயின் ரோடு, கவரைத்தெரு, கிராம சாவடி தெரு வழியாக மீண்டும் கோவில் முன்பு நிலையை வந்தடைந்தது.


Next Story