முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

புதுக்கோட்டை

வடகாடு:

தேரோட்டம்

வடகாடு அருகே மாங்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா, வாண வேடிக்கையுடன் நடந்து வந்தது. மேலும் இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், நேற்று தேரோட்டமும் நடந்தது.

இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருள செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் புடைசூழ வாண வேடிக்கையுடன் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தீர்த்தவாரி

இன்று(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் விளையாட்டு எனப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தேர்த்திருவிழாவையொட்டி கொத்தமங்கலம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பை சேர்ந்த மக்கள் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை ராஜ அலங்காரத்தில் குதிரை மீது ஏற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து, மாங்காடு முத்துமாரியம்மன் கோவிலில் ஊர் மக்களால் கவுரவிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் தேரின் வடம் தொட்டு வணங்கிய பின்னர், தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வழக்கம் நேற்றும் கடைபிடிக்கப்பட்டது.


Next Story