விநாயகர் ேகாவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் ேகாவில்களில் சிறப்பு பூஜை
x
திருப்பூர்


முத்தூர் நத்தக்காடையூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி

காங்கயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி காங்கயம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சிவன்மலை, ஊதியூர், படியூர், வீரணம்பாளையம், பாப்பினி, திட்டுப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

முத்தூர், முத்துமங்களம் மங்கள விநாயகர், ராம்நகர் ஆஞ்சநேயர் கோவில் விஜயபாலகணபதி, பெருமாள்புதூர் முகூர்த்த விநாயகர், வேப்பங்காடு சக்தி - சித்தி விநாயகர், மேட்டுக்கடை வெற்றி விநாயகர், சக்கரபாளையம் சர்க்கரை பிள்ளையார் மற்றும் நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில் வலம்புரி விநாயகர், வசந்த விநாயகர், நஞ்சப்பகவுண்டன்வலசு செல்வ சித்தி விநாயகர், பழைய வெள்ளியம்பாளையம் சக்தி விநாயகர், பழையகோட்டைப்புதூர் அரசு - வேம்பு விநாயகர், மேலப்பாளையம் தீரன் சின்னமலை விநாயகர் உட்பட நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிரசாதம்

இந்த கோவில்களில் மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, அருகம்புல் மாலை, சந்தன காப்பு அணிவிக்கப்பட்டு, சிறப்பு மலர் அலங்கார மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.

விழா நிறைவாக பக்தர்கள், நகர சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதங்கள், சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், சுண்டல், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story