தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பல்லடம் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இந்தப்போராட்டத்திற்கு டி.ஒய். எஃப்.ஐ. மாவட்டத் தலைவர் அருள் தலைமை வகித்தார். எஸ்.எப்.ஐ. சங்க மாவட்டத் தலைவர் பிரவீன் குமார், துணைத் தலைவர் மணிகண்டன், டி.ஒய். எஃப்.ஐ. மாநில குழு உறுப்பினர் சௌந்தர்யா, எஸ். எப். ஐ. மாநிலக் குழு உறுப்பினர் ஷாலினி, உள்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டு இந்தி திணிப்பை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர். முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story