முதல்முறையாக மூட்டுமாற்று அறுவை சிகிச்சை


முதல்முறையாக மூட்டுமாற்று அறுவை சிகிச்சை
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம், காங்கயம் பஸ் நிலையம் எதிரே தாலுகா அளவிலான அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் காங்கயம், களிமேடு பகுதியைச் சேர்ந்த லீலா (வயது 80) என்ற மூதாட்டி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக லீலா கீழே தவறி விழுந்து அவரது இடது பக்க இடுப்பு எலும்பு சேதமடைந்தது.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மூதாட்டி லீலாவுக்கு காங்கயம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவர் குழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது. சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், கூடுதல் சிகிச்சைக்குப் பின்னர் மூதாட்டி 3 நாட்களில் ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

இதையடுத்து காங்கயம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர்களுக்கு காங்கயம் பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் பி.கார்த்திகேயனுக்கு உதவியாக பல்லடம் அரசு மருத்துவமனை மயக்க மருந்து நிபுணர் செந்தில்குமார், காங்கயம் அரசு மருத்துவமனை செவிலியர் உமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story