மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் உள்ளது - முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பேச்சு
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது மிகவும் கடமை பொறுப்புமிக்க பதவிகளாகும், இத்தகைய உயர்பதவிகளுக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. துடிப்பும், ஆர்வமும் கொண்டவர்களாக பணியாற்ற வேண்டும்.
மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்தி விடாதீர்கள். சமூகத்தைப் பற்றி நிறைய படியுங்கள் சட்டத்தின்படியும், மனசாட்யின்படியும் நீங்கள் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதில்தான், என் முழு கவனமும் உள்ளது. எந்த சிக்கலும் இல்லாமல் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும். யாருக்கெல்லாம் உரிமைத்தொகை அவசியமோ, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மகளிருக்குப் பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.