'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு ஊர்வலம்


என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

‘என் குப்பை என் பொறுப்பு’ விழிப்புணர்வு ஊர்வலம்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி பேரூராட்சியில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பைக்கு பதிலாக மஞ்சள் பையை எடுப்போம், மழைநீரை சேமிப்போம், நிலத்தடி நீரை பாதுகாப்போம், மக்கும் குப்பை மக்கா குப்பையை பிரித்து கொடுப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் சென்றனர். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் டயானாஷர்மிளா, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.


Next Story