'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி


என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தலைஞாயிறு பேரூராட்சியில் ‘என் குப்பை என் பொறுப்பு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சியில் 'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேருராட்சி செயல் அலுவலர் குகன் தலைமையில் தலைஞாயிறில் உள்ள அரிச்சந்திரா நதி ஆற்று கரை பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தூய்மை பணி மேற்கொள்ளபட்டது. ஆற்றின்கரையின் இருபுறமும் குப்பைகள் அகற்றப்பட்டன. பின்னர் ஆற்றில் குப்பைகளை கொட்ட கூடாது என அந்த பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பேருராட்சி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள்,பொதுமக்கள். தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி.பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் தலைஞாயிறு பேரூராட்சி. துப்பரவு மேற்பார்வையாளர் அகிலா நன்றி கூறினார்.


Next Story