பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம ஆசாமி
வாணியம்பாடியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு ஜெயவேல் என்பவரை கார் டிரைவராக வேலைபார்க்கிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்திவிட்டு டாக்டரை காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
உடனே மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதுவுகளை பார்த்தபோது அதில் மோட்டார் சைக்கிளை மர் நபர் ஒருவர் எடுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயவேல் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் சி.எல்.ரோட்டில் ஒரு கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இந்த காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.