தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மர்ம படகு


தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மர்ம படகு
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மர்ம படகு கரை ஒதுங்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அது இலங்கையை சேர்ந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கரை ஒதுங்கிய படகு

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை தெற்கு கடற்கரையில் நேற்று படகு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

இதுபற்றி மீனவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கே விரைந்து சென்ற கடலோர போலீசார், அந்த மர்ம படகை பார்வையிட்டனர். அது சுமார் 20 அடி நீளம் கொண்ட பைபர் படகு என்பதும், ஒரு மாதத்திற்கு மேலாக அந்த படகானது கடல்நீரில் கிடந்திருக்கலாம் என்றும் தெரியவருகிறது.

படகின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி முழுவதும் பாசி பிடித்தும் சிப்பி சங்குகள் ஒட்டிய நிலையிலும் இருந்தது.

போலீசார் விசாரணை

இதை தொடர்ந்து அந்த படகை போலீசார், ராமேசுவரம் கடலோர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

கடத்தல்காரர்கள் யாரேனும் பயன்படுத்தி கடலுக்குள் விட்டு சென்ற படகா? சூறாவளி மற்றும் கடல் நீரோட்டதால் அரிச்சல்முனைக்கு இழுத்து வரப்பட்டு கரை ஒதுங்கிய இலங்கை படகா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story