50 பனைமரங்களை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்


50 பனைமரங்களை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்
x

50-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி சாய்ந்த மர்ம கும்பல், அதை கடத்த முயன்ற போது போலீசார் அங்கு சென்றதால் தப்பி ஓடிவிட்டனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேலம் சாலையையொட்டி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடை நீர்நிலை புறம்போக்கு உள்ளது. இந்த ஓடையின் இருகரைகளிலும் அதிகளவில் பனைமரங்கள் வளர்ந்துள்ளன.இதில், நேற்று காலை 9 மணிக்கு ஒரு பகுதியில் இருந்த பனைமரங்களை ஒரு கும்பல் வெட்டி சாய்த்துவிட்டு, அவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றுவதற்கு முயன்றனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். உடன் அவர்கள், வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வேப்பூர் துணை தாசில்தார் மஞ்சுளா ஆகியோர் மதியம் 2.30 மணிக்கு அந்த பகுதிக்கு சென்றனர்.

தப்பி ஓட்டம்

போலீசார் வருவதை பார்த்த அந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதில், 50-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு இருந்தன. பனைமரங்களை வெட்டி கடத்தும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து அவர்கள் விட்டு சென்ற பொக்லைன் எந்திரம், லாரி, மரம் வெட்டுவதற்கு பயன்படும் எந்திரங்கள் ஆகியற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story