ஊட்டி அருகேமாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார்-கொலையா? போலீஸ் விசாரணை
ஊட்டி அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டி
ஊட்டி அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி மாயம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளியப்பனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முத்தோரை பாலாடை பகுதியில் உள்ள கிணற்றில் வாலிபரின் உடல் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஊட்டி தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த உடலை மீட்டனர். விசாரணையில் அவர் 2 மாதத்திற்கு முன்னர் மாயமான காளியப்பன் என்பது தெரியவந்தது.
கொலையா?
இதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசிவிட்டு சென்று உள்ளார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான தொழிலாளி ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.