உபரிநீர் வழிந்தோடும் இடங்களில் ஏரியை உடைத்த மர்ம நபர்கள்


உபரிநீர் வழிந்தோடும் இடங்களில் ஏரியை உடைத்த மர்ம நபர்கள்
x

மீன் பிடிப்பதற்காக உபரிநீர் வழிந்தோடும் இடங்களில் ஏரியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாத்தனூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக ஏரி நிரம்பி வரும் நிலையில் மர்ம நபர்கள் சிலர் மீன் பிடிப்பதற்காக உபரிநீர் வழிந்தோடும் இடங்களில் உடைத்துள்ளனர். இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் ஏரியில் தேங்காமல் வெளியேறி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைக்கப்பட்ட இடங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story