திருடிவந்த மாட்டை விட்டு விட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள்


திருடிவந்த மாட்டை விட்டு விட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள்
x

வள்ளிமலை அருகே இரவில் மாடு திருடிவந்த 2 மர்ம நபர்கள், பொதுமக்கள் பிடிக்க முயன்றதால் மாட்டை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

வேலூர்

மாடு திருடி வந்தனர்

தமிழ்நாடு- ஆந்திர எல்லைப் பகுதியிலிருந்து மாடு ஒன்றை திருடிவந்த இருவர் வள்ளிமலை அடுத்த போடிநத்தம் கிராமத்தில் அதை கட்டி வைத்து. பின்னர் பொன்னை பகுதிக்கு கொண்டு செல்ல ஆட்டோவை அழைத்து வந்துள்ளனர். அந்த ஆட்டோ டிரைவர் மாடு என்ன விலைக்கு வாங்கினீர்கள், யாரிடத்தில் வாங்கினீர்கள் என விசாரித்துள்ளார்.

இதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரண்பாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் என்னால் சவாரிக்கு வர முடியாது என திரும்பி சென்றுள்ளார். அதன் பின்னர் இருவரும் மாட்டை நடந்தே ஓட்டிச் சென்றுள்ளனர்.

தப்பி ஓட்டம்

பெருமாள்குப்பம் காட்டூர் பகுதிக்கு மாட்டை ஓட்டி வந்தபோது அந்த கிராம பொதுமக்கள் இரவில் ஏன் மாட்டை ஓட்டி செல்கிறார்கள் என சந்தேகம் அடைந்து அவர்களை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர்.

உடனே இருவரும் மாட்டை விட்டுவிட்டு, மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். உடனே இதுகுறித்து கிராம பொதுமக்கள், மேல்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தன்பேரில் மேல்பாடி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் விரைந்து சென்று கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

மாடு யாருடையது, எங்கிருந்து திருடி வந்தார்கள், தப்பி ஓடியவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story