பனை மரங்கள், ஈச்சமரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய மர்ம நபர்கள்


பனை மரங்கள், ஈச்சமரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய மர்ம நபர்கள்
x

அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் வேருடன் சாய்த்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

செய்யாறு


அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் வேருடன் சாய்த்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செய்யாறு தாலுகா ஏனாதவாடிக் கிராமம் முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இக்கிராமத்தில் இருந்து புளுந்தை கிராமத்திற்கு செல்லும் வழியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 150 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு அப்பகுதி விவசாயிகள் செல்வதற்கும், புளூந்தைக் கிராமத்திற்கு சென்று வருவதற்கும் வயல்வெளியை ஒட்டிய பகுதியில் பாட்டைப் புறம்போக்கில் ஏராளமான பனைமரங்கள், ஈச்ச மரங்கள், முள்வேலி மரங்கள் என பலவகைப்பட்ட மரங்கள் பல வருடங்களாக வளர்ந்த மரங்கள் இருந்து வருகின்றன.

அரசுக்குச் சொந்தமான பாட்டைப் புறம்போக்குப் பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் எண்ணத்தோடு அப்பகுதியில் வளர்ந்து வந்த 22 பனைமரங்கள், 2 ஈச்ச மரங்கள் உள்ளிட்ட பல மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் வேறொடு சாய்ந்து சில தினங்களாக அப்புறபடுத்தி வருகின்றனர். இதனை அறிந்த ஏனாதவாடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் செய்யாறு தாசில்தார் சுமதியிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவின் பேரில் விசாரணை மேற்கொள்ள வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தாசில்தார் சுமதி உத்தரவிட்டு இருந்தார். அவரது உத்தரவின் பேரில் பனைமரங்கள், ஈச்சமரங்கள் உள்ளிட்ட பல மரங்களை வேறொடு சாய்க்கப்பட்டதை கிராம நிர்வாக அலுவலர் சத்யா உறுதி செய்து மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளளார்.


Next Story