கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்மநபர்கள்


கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்மநபர்கள்
x

நெல்லை குறுக்குத்துறையில் கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை குறுக்குத்துறை பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் ேகாவிலை நிர்வாகிகள் பூட்டி சென்றனர். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவிலின் உண்டியலை தூக்கி சென்றனர். பின்னர் அதனை மீனாட்சிபுரம் பகுதிக்கு கொண்டு சென்று, உண்டியலை உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

நேற்று காலையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், உண்டியல் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உண்டியலை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story