கம்பத்தில் பரவும் மர்ம காய்ச்சல்
கம்பத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
தேனி
கம்பத்தில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் உள்ளவர்களுக்கு தொண்டை வலி, இருமல் மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் அவதிப்படுகின்றனர். கம்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கம்பம் அரசு மருத்துவமனை டாக்டர் மகேஷ் பாண்டியனிடம் கேட்டபோது, இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டரிடம் சென்று உரிய சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும். இது பருவமழை காலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் தான் பயப்பட தேவையில்லை. வெந்நீர் குடிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story