டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலம்
x

டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.

திருச்சி

மணிகண்டம் அருகே நாகமங்கலம் ஊராட்சி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரியும், டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளரை தாக்க முயன்றதாக நாம்தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவர் அருள்ஜோசப் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் பிரபு தலைமையில் ஆலம்பட்டி பைபாஸ் ரோட்டில் இருந்து மதுபான கடைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து மதுபான கடையை முற்றுகையிடுவதற்காக சென்ற நாம் தமிழர் கட்சியினரை அங்கு தயாராக இருந்த நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மணிகண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story