நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலைக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு மகாலில் வேறு மொழிகளில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் அந்த மகாலுக்கு சென்று அண்டை மாநில மொழியில் இங்கு அறிவிப்பு பேனர் வைத்தது ஏன்? என்று கேட்டு மேலாளரை மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த மகாலைச் சேர்ந்த நிர்வாகிகள் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story