நாம் தமிழர் கட்சியினர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
பூட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் நாம் தமிழர் கட்சியினர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில், ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் பாசறை செயலாளர் தமிழ் உதயா, இணையதள பாசறை செயலாளர் ராஜா, சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story