நாம் தமிழர் கட்சியினர் பா.ஜனதாவில் இணைந்தனர்


நாம் தமிழர் கட்சியினர் பா.ஜனதாவில் இணைந்தனர்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர், பா.ஜனதா கட்சியுடன் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகி செண்பகராஜ் தலைமையில் சுமார் 50 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, நகர தலைவர் சீனிவாசன், நகர பொது செயலாளர்கள் விஜயகுமார், அசோக், நகர பொருளாளர் பாலமுருகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story