நாம் தமிழர் கட்சியினர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
நாம் தமிழர் கட்சியினர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிரணி பாசறை செயலாளர் செல்லம்மாள் மற்றும் மாணவரணி பாசறை செயலாளர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில், அக்கட்சியினர் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்களில் சிலர் போலீஸ் அலுவலகத்துக்குள் சென்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொய்யான புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் மீது சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story