தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்


தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
x

மணல் திருட்டை தடுக்க கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

ராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடி பெருமாள் கோவில் படித்துறை வைகை ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரம் டிப்பர் லாரி மூலம் மணல் திருட்டுத்தனமாக எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து பரமக்குடி நகர் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் காமராஜ், மாவட்ட தலைவர் இசை அரசன், கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திரண்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்பு அவர்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story