டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

ஆரணி

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆரணி பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில் காந்தி ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. பயணிகளுக்கு இந்த கடை இடையூறாக இருப்பதாக கோரி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது நம்மாழ்வார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பின்னர் ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர். பல்வேறு வியாபார சங்க நிர்வாகிகளும், நாம் தமிழர் கட்சியை பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story