நாகை மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்
மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 7-ந்தேதி கடைசி நாள் என்று நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.
மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 7-ந்தேதி கடைசி நாள் என்று நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச திறன் போட்டி
தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது தொழில்திறன்களையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படும். பிரான்சில் உள்ள லியான் நகரில் செப்டம்பர் 2024-ம் ஆண்டு சர்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க ஏதுவாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் 55 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற 7-ந்தேதி கடைசிநாளாகும். இதற்கான வயது வரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு 1.1.2002 அன்றும் அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
இணையதளத்தில் தெரிந்து ெகாள்ளலாம்
5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்துக்கொண்டு இருப்பவர்கள், தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக்கொண்டு இருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரிடம் நேரிலோ அல்லது 04365250126 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.