நாகை மாவட்டத்தில் நாளை 10 இடங்களில் ரெயில் மறியல்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 10 இடங்களில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 10 இடங்களில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஆலோசனைக் கூட்டம்
நாகையில் காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
எம்.பி. பதவி பறிப்பு
இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு, ரெயில் மறியல், கடலில் இறங்குவது, தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை தெரிவித்தோம்.
ரெயில் மறியல் போராட்டம்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாளை (சனிக்கிழமை) நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.