நாகலாந்து மாநில அரசின் விருந்தினர் மாளிகை கட்ட இடம் தேர்வு
நாகலாந்து மாநில அரசின் விருந்தினர் மாளிகை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அரப்பாக்கம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தில் நாகலாந்து மாநில அரசின் விருந்தினர் மாளிகை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நாகாலாந்து மாநில அரசின் பொறியாளர்கள் குழு பார்வையிட்டு அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், நாகலாந்து மாநில அரசின் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிடோசிஈலி, கென் குருசி, உதவி பொறியாளர் மெடிவினுதோல், இளநிலை பொறியாளர் குமுரகா ஷோகி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story