நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம்


நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம்
x

திருமயம் அருகே நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம் அருகே உள்ள பேரையூர் நாகநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் நாகநாதர் மற்றும் அம்பாளை அமர்த்தினார்கள். பின்னர் வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மக்கள் கூட்டத்தின் நடுவே ஆடி அசைந்து சென்றது. தேரில் வந்த சுவாமிக்கு பக்தர்கள் ஆங்காங்கே அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். தேர் கோவிலை சுற்றி நான்கு விதியில் சுற்றி தேரடியை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து 2-வது அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்மனை அமர்த்தி பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் பேரையூர் பகுதியை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


Next Story