நாகூர் சில்லடி தர்கா கடலில் மூழ்கி வக்கீல் பலி
நாகூர் சில்லடி தர்கா கடலில் மூழ்கி வக்கீல் பலி
நாகப்பட்டினம்
நாகூர் சில்லடி தர்கா கடலில் மூழ்கி தஞ்சையை சேர்ந்த வக்கீல் பரிதாபமாக இறந்தார்.
கடலில் மூழ்கி வக்கீல் சாவு
தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் முகமதுஇஸ்மாயில் (வயது42). வக்கீல். நேற்றுமுன்தினம் இவர் நாகூர் தர்காவிற்கு சென்றுள்ளார். பின்னர் நாகூர் சில்லடி தர்கா கடலில் குளித்தார். அப்போது திடீரென கடல் அலையில் சிக்கி முகமது இஸ்மாயில் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முகமதுஇஸ்மாயில் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
விசாரணை
இதுகுறித்து நாகப்பட்டினம் கடற்கரை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மூழ்கி தஞ்சையை சேர்்ந்த வக்கீல் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story